×

சோதனைச்சாவடிகளில் வருவாய் மற்றும் ஊரக வளர்ச்சித்துறையினர் கண்காணிப்பு: ஊரடங்கு பகுதியில் அதிகளவில் வாகனங்கள் வருவதால் நடவடிக்கை

மதுரை: மதுரை மாவட்டத்தில் முழு ஊரடங்கு அமலில் உள்ள பகுதியில் அதனை மீறி, அதிகளவு வாகனங்கள் வருவதால், இப்பகுதியில் உள்ள 20 சோதனைச்சாவடிகளில் போலீசாருடன் இணைந்து, வருவாய்த்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இ-பாஸ் இல்லாமல் வருபவர்களை நகருக்குள் நுழைய விடாமல் தடுப்பதற்காகவே, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் வரும் 31ம் தேதி 6 கட்டமாக ஊரடங்கு அமலில் உள்ளது. இதில் மதுரை மாவட்ட மாநகராட்சி, பரவை பேரூராட்சி, மதுரை கிழக்கு, மேற்கு, திருப்பரங்குன்றம் ஆகிய பகுதிகளில் முழு ஊரடங்கு கடந்த மாதம் 24ம் தேதி முதல் வரும் 12ம் தேதி வரை அமல்படுத்தப்படுகிறது.

இந்த ஊரடங்கு காலத்தில், மதுரை நகருக்குள் அதிகமான வாகன போக்குவரத்து இருப்பதால், வெளியூர்களில் இருந்து வாகனங்கள் அதிக அளவில் நகருக்குள் வருவதாக புகார் எழுந்தது. இதைத்தொடர்ந்து, மதுரை மாவட்ட கலெக்டர் வினய் விடுத்துள்ளஅறிக்கையில், ‘மாவட்டத்தில் முழு ஊரடங்கு அமலில் உள்ள பகுதிகளில், சிவகங்கை ரோடு, ராமநாதபுரம் ரோடு, சிந்தாமணி ரோடு, மண்டேலா நகர், தேனி ரோடு, சமயநல்லூர் ரோடு உள்பட 20 இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு, போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுடன் வருவாய்த்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறையினரும் தற்போது கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரையும், மதியம் 2 மணி முதல் இரவு 10 மணி வரையும், இரவு 10 மணி முதல் மறுநாள் அதிகாலை 6 மணி வரையும் என 3 ஷிட்டுகளாக பணியாற்றுவர்.

இவர்கள் இ.பாஸ் உள்ள நபர்கள் தான் வருகிறார்களா? இ-பாஸ்சில் உள்ள பெயர், ஆதார் எண், வாகன எண் உள்ளிட்ட அனைத்தும் சரியாக உள்ளதா? என ெசக் அப் செய்து, வாகன எண்ணை எழுதி வைத்துக்கொண்டு, வாகனங்களை நகருக்குள் அனுமதிப்பர். இ.பாஸ் இல்லாமல் வரும் வாகனங்களை திருப்பி அனுப்பி விடும் பணியில் ஈடுபடுவர். இவர்கள் நேற்று முதல் போலீசாருடன் இணைந்து வரும் 14ம் தேதி வரை இப்பணியில் ஈடுபடுவார்கள்” என தெரிவித்துள்ளார்.

Tags : Checkpoints ,curfew area , Inspection, Revenue, Rural Development and Monitoring
× RELATED கேரளாவில் பறவைக் காய்ச்சல் பரவலால்...