×

சமூகவலைதளத்தில் அவதூறு : நடிகை வனிதா புகார்

சென்னை: பிரபல நடிகை வனிதா. சமீபத்தில் பீட்டர்பால் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, போரூர் போலீஸ் நிலையத்திற்கு வழக்கறிஞர் ஒருவருடன் நடிகை வனிதா வந்தார். அவர் அளித்த புகார் மனுவில், சமூக வலைதளத்தில் சூர்யாதேவி என்ற பெண் தனது 3வது திருமணம் குறித்து நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் முகநூல், யுடியூப் உள்ளிட்ட சமூக வலைதளத்தில் அவதூறாக பேசியதாகவும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார். இதுகுறித்து போரூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


Tags : Social networking, slander, actress Vanitha, complaint
× RELATED கொரோனா தொற்று பாதிப்பால் போலீஸ் ஏட்டு உள்பட 3 பேர் பலி