×

ஆந்திராவில் ஆட்டோ , டாக்சி ஓட்டுநர்களுக்கு தலா ரூ.10,000 நிதியுதவி வழங்கப்படும் : முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவிப்பு

ஹைதராபாத் : ஆந்திராவில் ஆட்டோ மற்றும் டாக்சி ஓட்டுநர்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்று ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார். ஆந்திராவில், முதல்வர், ஒய்.எஸ்.ஆர்.ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில், ஒய்.எஸ்.ஆர்., - காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு, காப்பீட்டு பிரீமியம், உரிம கட்டணம் மற்றும் தொடர்ச்சியான செலவுகளைச் சந்திக்க ஆட்டோ மற்றும் டாக்ஸி ஓட்டுநர்களுக்கு ஆண்டுக்கு ரூ10,000 கொடுக்கும் வழங்கும் நோக்கில் ஒய்.எஸ்.ஆர் வாகனா மித்ரா திட்டம் 2019 கடந்த ஆண்டு அக்டோபர் 4ம் தேதி அறிவிக்கப்பட்டது.

இத்திட்டத்தின் கீழ், அமராவதி நகரில் நடைபெற்ற விழாவில், ஒய்.எஸ்.ஆர். ஜெகன் மோகன்ரெட்டி, பயனாளிகளுக்கு ஊக்கத் தொகை வழங்கினார். தடேப்பள்ளியில் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசிய ஜெகன்மோகன் ரெட்டி, கொரோனாவால் வருவாய் இழந்துள்ளோருக்காக, இந்த ஊக்கத் தொகை, நான்கு மாதங்களுக்கு முன்னதாகவே வழங்கப்படுகிறது. இதை, வாகன உரிமம் புதுப்பிப்பு, காப்பீடு உள்ளிட்டவற்றின் செலவுகளுக்கு பயன்படுத்த வேண்டும். மதுவுக்கு பயன்படுத்தக் கூடாது. அவ்வாறு செய்தால், அது ஓட்டுனருக்கு மட்டுமின்றி பயணியரையும் பாதிக்கும்.இத்திட்டத்தில் இணைவதற்கான தகுதிகள் குறித்து, உள்ளுர் நிர்வாகத்திடம் கேட்டறியலாம். தகுதி இருப்பின், விண்ணப்பித்து இணையலாம், என்றார்.

Tags : Jaganmohan Reddy ,drivers ,Andhra Pradesh , Andhra, Auto, Taxi, Drivers, Rs 10,000, Sponsor, Chief Minister, Jaganmohan Reddy, Announcement
× RELATED ஆந்திராவில் ஜனசேனா கட்சி தலைவர்...