×

கள்ளக்குறிச்சி அருகே கோழிப் பண்ணை ஒன்றில் பயங்கர தீ விபத்து : 2000த்திற்கும் அதிகமான கோழிகள் மடிந்தன

விழுப்புரம் : கள்ளக்குறிச்சி அருகே கோழிப் பண்ணை ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீயால் 2,000திற்கும் அதிகமான கோழிகள் மடிந்தன. கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள நத்தாம் கிராமத்தைச் சேர்ந்த தேவேந்திரன் என்பவருக்கு சொந்தமான கோழிப் பண்ணையில் தீ விபத்து நிகழ்ந்து உள்ளது. கோழிகள் அடைக்கப்பட்டு இருந்த கொட்டைகள் தீப்பிடித்து எரிய ஆரம்பித்ததால் எங்கும் புகைமண்டலம் ஆனது. தீயில் கோழிப்பண்ணையின் உள்ளே இருந்த 2,000த்திற்கும் அதிகமான கோழிகள் தீயில் கருகி உயிரிழந்தன.

தகவல் அறிந்த உளுந்தூர்பேட்டையைச் சேர்ந்த தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைக்க போராடினர்.தீயணைப்புத் துறையினர் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில், ரூ. 7 லட்சம் மதிப்பிலான பொருட்கள் மற்றும் கோழிகள் எரிந்து நாசமாகி இருக்கலாம் எனத் தெரிகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் உளுந்தூர்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த கோழிப்பண்ணையில் மின்கசிவு காரணமாக தீ பிடித்து ஏற்பட்டு இருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.


Tags : poultry farm ,Kallakurichi , Poultry, poultry, terror, fire, accident
× RELATED அதிமுக ஆதரவாளருக்கு சொந்தமான...