×

வயல்வெளிகளில் ஆக்கிரமித்து இருந்தால் டிரம் சத்தம் கேட்டு வெட்டுக்கிளி எஸ்கேப் ஆகும்: திருவள்ளூர் கலெக்டர் சூப்பர் யோசனை

சென்னை: டிரம் அல்லது டின் கொண்டு ஒலி எழுப்பினால் வெட்டுக்கிளி ஓட்டம் பிடிக்கும் என கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமையில், பயிர்களை நாசமாக்கும் பாலைவன வெட்டுக்கிளிகளை எதிர்கொள்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. பின்னர் அவர் கூறுகையில், வெட்டுக்கிளி ஊடுருவலை கண்காணிக்க ஒரு சிறப்புக் குழு அமைக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. பயிர்களை துவம்சம் செய்யும் பாலைவன வெட்டுக்கிளிகள் குறித்து திருவள்ளுர் விவசாயிகள் அச்சப்பட தேவையில்லை. பாலைவன வெட்டுக்கிளிகளின் ஊடுருவல் ஏற்படுமாயின், அதனை எதிர்கொள்ளும் பொருட்டு, பரிந்துரைக்கப்பட்ட பூச்சிக்கொல்லிகள் மற்றும் ரசாயன மருந்துகள் தேவையான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

பாலைவன வெட்டுக்கிளி தாக்குதல் ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட விவசாயிகள், வயல்களில் டிரம் அல்லது டின்கள் கொண்டு ஒலி எழுப்புவதன் மூலம் வெட்டுக்கிளிகள் பயிர்களின் மேல் அமர்வதை தடுக்கலாம். எனவே, விவசாயிகள் உள்ளுர் வெட்டுக்கிளிகளைக் கண்டு பாலைவன வெட்டுக்கிளிகள் என அச்சப்பட வேண்டாம். இருப்பினும் வெட்டுக்கிளிகள் கூட்டமாக தென்பட்டால், அருகில் உள்ள வேளாண்மைத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறைக்கு தகவல் தெரிவித்து ஆலோசனை பெறலாம் என்றார். பாலைவன வெட்டுக்கிளிகள் படையெடுப்பால் ராஜஸ்தான், மத்தியப் பிரதேச மாநில அரசுகளும், மத்திய அரசும் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்துப்போய் உள்ளார். ஆனால் அசால்டாக திருவள்ளூர் கலெக்டர் யோசனைகளை அள்ளிவிட்டுள்ளார். ராஜஸ்தான், மத்தியப்பிரதேச அரசும் டிரம் கொண்டு ஒலி எழுப்பி வெட்டுக் கிளியை விரட்ட தமிழக அரசும் ஐடியா கொடுத்தால் நன்றாக இருக்கும் என்கின்றனர் விவசாயிகள்.

Tags : Thiruvallur Collector Super ,collector ,hearing drum noise ,Thiruvallur , Fields, Drum Noise, Locust, Thiruvallur Collector Super
× RELATED பறவைக் காய்ச்சல் எதிரொலி: நாமக்கல்...