×

வெளி மாநிலத்தவரை கண்காணிக்க வேலூரில் 2 இடங்களில் செக்போஸ்ட்

வேலூர்: வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கு வரும் வடமாநிலத்தவர்களை கண்காணிக்க 2 இடங்களில் செக்போஸ்ட்கள் அமைக்கப்பட்டது. இதுகுறித்து வேலூர் கலெக்டர் சண்முகசுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ‘கொரோனா நோயாளிகள் விவரங்களை அந்தந்த மாவட்ட நிர்வாகங்களுக்கு அரசு மருத்துவமனைகள் மட்டுமின்றி தனியார் மருத்துவமனைகளும் தெரிவிக்க வேண்டியது அவசியம். சென்னையில் இருந்து வரும் கொரோனா நோயாளிகளை அனுமதித்தது குறித்து வேலூர் சிஎம்சி மருத்துவமனை சார்பில் மாவட்ட நிர்வாகத்துக்கு எந்தவித தகவலும் தெரிவிக்கவில்லை.

போலீசார் நடத்திய திடீர் சோதனையில் எந்தவித தகவலும் அளிக்காமல் நோயாளிகளை அனுமதித்திருப்பது தெரியவந்தது. இதுபோன்ற விதிமீறலை தவிர்த்து நேர்மையான நடவடிக்கைகள் அவசியமானது. எனவே, கொரோனா நோயாளிகள் விவரங்களை வழங்கி மாவட்ட நிர்வாகத்துக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சிஎம்சி மருத்துவமனைக்கு இ-பாஸ் இல்லாமல் வரும் கொரோனா நோயாளிகள் சிகிச்சைக்கு அனுமதிக்கப்படுவதை தவிர்க்கும் வகையில் வேலூர்-ஆற்காடு சாலையில் 2 இடங்களில் செக்போஸ்ட்கள் அமைத்து 24 மணி நேரமும் தீவிரமாக கண்காணிக்க எஸ்பி பிரவேஷ்குமார் உத்தரவிட்டார்.

அதன்படி வேலூர் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி தலைமையிலான போலீசார் நேற்று மாலை காகிதப்பட்டறையில் பேரிகார்டுகள் வைத்து தற்காலிக செக்போஸ்ட் அமைத்தனர். இந்த வழியாக இருசக்கர வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்று ேபாலீசார் தெரிவித்தனர். அதேபோல் பேலஸ் சந்திப்பில் மற்றொரு செக்போஸ்ட் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வழியாக மட்டுமே தீவிர சோதனைக்கு பிறகு 4 சக்கர வாகனங்கள் அனுமதிக்கப்படுகிறது.

Tags : Checkpoint ,places ,outpost ,Vellore , Outlander, Vellore, Checkpost
× RELATED பண்ணாரி சோதனை சாவடியில் ஒற்றை யானை நடமாட்டம்