×

2-வது முறை பிரதமராக மோடி பதவியேற்று நாளையுடன் ஓராண்டு நிறைவு; கொரோனாவை திறன்பட கையாள்வதாக 60% பொதுமக்கள் கருத்து...!

டெல்லி: கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதில் பிரதமர் மோடி திறமையாக கையாண்டு வருவதாக 62% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் 345 தொகுதிகளை கைப்பற்றி, இரண்டாவது முறையாக மத்தியில் ஆட்சியை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தக்க வைத்துக் கொண்டது. இதன் மூலம், நாட்டின் பிரதமராக தொடர்ந்து 2-வது முறையாகப் பதவியேற்று வரலாற்று பெருமையை ஜவாஹர்லால் நேரு,  இந்திரா காந்தி ஆகியோருக்கு அடுத்து நரேந்திர மோடி பெற்றார்.

பிரதமராக 2-வது முறையாக நரேந்திர மோடி பதவியேற்று நாளையுடன் (30-ம் தேதி) ஒராண்டு ஆட்சியை நிறைவு செய்கிறார். இதற்கிடையே, இந்நிலையில் வரும் 30-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடியின் ஓராண்டு நிறைவு விழாவை கொண்டாட பாரதிய ஜனதா கட்சி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்காக கட்சி நிர்வாகிகள் முழுவீச்சில் செயல்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும் நாடு முழுவதும் பேரணிகள் மற்றும் பல்வேறு சாதனைகைளை குறித்தும் மக்களிடையே விளக்க முடிவு செய்துள்ளது.

இந்நிலையில், நாடு முழுவதும் மக்களிடையே பிரதமர் மோடியின் ஆட்சி குறித்து கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. இதில், பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான மத்திய அரசு கொரோனா தொற்றை திறம்பட கையாண்டு வருவதாக 62% பேரும், 31% ஓரளவு திறம்பட கையாண்டதாக கருத்து தெரிவித்துள்ளனர். இதற்கிடையே, மத்திய அரசு பல்வேறு வருடங்களாக நிலுவையில் இருந்த பிரச்சனைகளை இரண்டாவது பதவிக்காலத்தில் வேகமாக செயல்படுவதாகவும், இந்துத்துவ வாக்குறுதிகளை நிறைவேற்றியது.
காஷ்மீர் மாநிலத்திற்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை நீக்கியது, முத்தலாக் சட்டம் நிறைவேற்றப்பட்டது, அயோத்தி வழக்கை சுமூகமாக முடித்தது உள்ளிட்டவற்றுக்கு பெரும்பாலோனார் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

Tags : Modi ,Corona ,swearing-in , 2nd anniversary of Modi's swearing-in; 60% public opinion on Corona's handling ......
× RELATED கீழ்த்தரமான அரசியல்வாதி போல பிரதமர்...