×

காவல்நிலையம் முன் டிக்டாக் வாலிபர் கைது

சீர்காழி:நாகை மாவட்டம் சீர்காழியை சேர்ந்தவர் கமலகண்ணன் (30). கொரோனா ஊரடங்கு காரணமாக காவல் துறையினருக்கு உதவியாக அமைக்கப்பட்ட காவல்துறை நண்பர்கள் குழுவில் சேர்ந்து சீர்காழி காவல் நிலையத்தில் காவலர்களுக்கு உதவியாக கமலகண்ணன் இருந்து வந்தார். இந்நிலையில் காவல் நிலையம் முன்பும், காவலர்களுடனும் இருக்கும் வீடியோக்களை சில திரைப்பட வசனங்களுடன் இணைத்து டிக்டாக்கில் விளையாட்டாக பதிவேற்றியுள்ளார். இது சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. போலீசார் கமலகண்ணனை கைது செய்தனர்.


Tags : police station ,The Young Men ,Tiktok , Police Station, tiktok, youth arrested
× RELATED மாநகர காவல் நிலையங்களில் புதிய இன்ஸ்பெக்டர்கள் பொறுப்பேற்பு