×

குணம் அடைந்தவர்களுக்கு மீண்டும் கொரோனா: 51 பேர் பாதிப்பு.;தென்கொரியாவில் அதிர்ச்சி

சியோல்: கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 51 பேர் சிகிச்சைக்கு பின்னர் குணம் அடைந்ததாக அறிவிக்கப்பட்டு வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், அவர்கள் மீண்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சம்பவம் தென்கொரியாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா தொற்று உலகம் முழுவதும் 209 நாடுகளில் பாதிப்பை ஏற்பட்டுள்ளது. இதுவரை 88 ஆயிரம் உயிர்களை பலி வாங்கிய நிலையில், 15 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தென்கொரியாவில் சுமார் 10000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 200 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் தென்கொரியாவின் டாயிகு நகரில் கொரோனா வைரஸ் தொற்றுடன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற வந்த 51 பேர் குணடைந்துவிட்டதாக அறிவித்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
எனினும் அவர்களை தனிமைப்படுத்தி தொடர்ந்து கண்காணித்து அவ்வப்போது மருத்துவ பரிசோதனை செய்து வந்தனர். இந்நிலையில் 51 பேருக்கும் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து அவர்கள் அனைவரும் உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுபற்றி தென்கொரியா மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில்,மனிதனின் உடலில் பல்லாயிரம் கோடி செல்கள் உள்ளன. இதில் ஏதோ ஒரு செல்லில் பிரிக்க முடியாத அளவுக்கு கொரோனா வைரஸ் ஒட்டிக்கொண்டுள்ளது. குணம் அடைந்தவர்களையும் மீண்டும் தாக்க வாய்ப்பு உள்ளது என்று எச்சரித்தனர்.
ஆனால் இந்த தகவலை இங்கிலாந்து ஈஸ்ட் ஆங்கிலியா பல்கலைக்கழகத்தின் தொற்று நோய்த்துறை பேராசிரியர் பால் ஹண்ட் கூறுகையில், இதில் பரிசோதனை முறைகள் தவறாக கையாளப்பட்டு இருக்கவே அதிக வாய்ப்பு உள்ளது. அதனால் தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மீண்டும் பாதிக்கப்பட்டதாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. என்னை பொறுத்தவரை குணம் அடைந்த ஒருவர் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட வாய்ப்பே இல்லை என்றார்.

Tags : South Korea , Characteristics Corona, affect, South Korea, trauma
× RELATED வடகொரியா போருக்கு தயாராகி வருகிறது:...