×

பணகுடி ரோஸ்மியாபுரம் அருகே மலை கோயிலுக்கு வந்தவர்கள் டிரோன் மூலம் கண்காணிப்பு

பணகுடி: ஊரடங்கு உத்தரவையொட்டி பணகுடி பகுதியில் ரோந்து மேற்கொண்ட போலீசார் டிரோன் மூலம் கண்காணிப்பை தீவிரப்படுத்தினர். இதனிடையே மலைப்பகுதியில் உள்ள கோயிலுக்கு வந்த பக்தர்களையும் கண்காணித்தனர். நெல்லை மாவட்டம் பணகுடி, அண்ணாநகர், தளவாய்புரம், நெருஞ்சி காலனி உள்ளிட்ட பல்வேறு பகுதிளில் சுமார் 500 அடி உயரத்திற்கு டிரோனை பறக்கவிட்டு அதன்முலம் கண்காணிப்பு மேற்கொண்ட போலீசார், இதில் சுற்றித்திரியும் போது கண்டறியப்படும் ஆட்களை எச்சரித்து அனுப்பி வந்தனர்.

இதேபோல் ரோஸ்மியாபுரம் அருகே மலைப்பகுதியில் உள்ள புதுமை லட்சுமி அம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை தோறும் பக்தர்கள் அதிக அளவில் வரக்கூடும் என்பதால் இன்ஸ்பெக்டர் சாகுல் ஹமீது, எஸ்.ஐ.கள் ஆண்டோ பிரதீப், ஜமால் மற்றும் போலீசார் அங்கு சென்றதோடு டிரோனை பறக்கவிட்டு கண்காணித்தனர். இதில் கோயில் பகுதியில் தரிசனத்திற்காக வந்திருந்த பெண்கள், குழந்தைகள் என சுமார் 40 பேரை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

Tags : hill temple ,Dhankadiyam Rosmiyapuram ,Mountain Temple , Cashier, Mountain Temple, Drone, Watch
× RELATED பழநி நகரில் பிளாஸ்டிக் பொருட்கள்...