×

மத்திய அரசு 14ம் தேதி முடிவு பள்ளி, கல்லூரிகளை எப்போது திறக்கலாம்?

மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், டெல்லியில் நேற்று அளித்த பேட்டி:  பள்ளி, கல்லூரிகளை திறப்பது பற்றி இப்போது முடிவு எடுப்பது கடினம். கொரோனா நிலவரத்தை ஆய்வு செய்த பின், சூழ்நிலைக்கு தகுந்தபடி இவற்றை திறப்பதா? அல்லது இன்னும் சில நாட்கள் மூடுவதா? என்பது பற்றி வரும் 14ம் தேதி முடிவு எடுக்கப்படும். நாட்டில் 34 கோடி மாணவர்கள் உள்ளனர். இது அமெரிக்க மக்கள் தொகையை விட அதிகம். நமது மிகப் பெரிய சொத்து மாணவர்கள்தான். மாணவர்கள், ஆசிரியர்களின் பாதுகாப்புக்கு அரசு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. ‘ஸ்வயம்’ போன்ற பல அரசு அமைப்புகள் மூலம் ஆன்லைனில்  வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

14ம் தேதிக்குப் பின்பும் பள்ளி, கல்லூரிகளை மூட வேண்டிய தேவை ஏற்பட்டால், மாணவர்களுக்கு எந்த கல்வி இழப்பும் ஏற்படாது என்பதை அரசு உறுதி செய்யும். நிலைமை சீரடைந்து முடக்கம் நீக்கப்பட்டதும், நிலுவையில் உள்ள தேர்வுகளை நடத்துவது, விடைத்தாள்கள் திருத்துவது போன்ற திட்டமும் தயாராக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Government ,schools ,colleges ,school , Central Government, Schools, Colleges,
× RELATED ஆகஸ்ட் மாதம் 2-வது வாரத்தில் பள்ளிகளை...