×

கொரோனா தொற்று விவசாயம் உள்ளிட்ட பல்வேறு தொழில் பாதிப்புக்கு ஏன் தீர்வு காணவில்லை? தமிழக அரசுக்கு கே.எஸ்.அழகிரி கேள்வி

சென்னை:  தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்ட அறிக்கை: விவசாயிகள் தங்கள் பயிரிடுகிற நெல்லை அறுவடை செய்ய முடியாமல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும் 60 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர் கருகி கிடப்பதால் ஆயிரக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது.  தீவனங்கள், முட்டைகள், கறிக்கோழிகள் எடுத்துச்செல்லும் லாரிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் 800 கோடி இழப்பு தமிழக கோழி பண்ணையாளர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. இந்த நஷ்டத்தை எப்படி எதிர்கொள்வது? இதுகுறித்து தமிழக ஆட்சியாளர்கள் உரிய தீர்வு காணாதது ஏன்?தமிழக அரசு 21 நாள் மக்கள் ஊரடங்கு காரணமாக விவசாயம் உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் சந்திக்கிற கடுமையான பாதிப்புகளுக்கு தீர்வு காண எந்த நடவடிக்கையும் ஏன் எடுக்கப்படவில்லை?Tags : Government of Tamil Nadu ,KS Alagiri , Corona, Agriculture, Industry Impact, Government of Tamil Nadu, KSAlagiri
× RELATED வெளிநாடுகளில் இருந்து வெள்ளி...