×

நிர்பயா குற்றவாளிகளில் ஒருவரான அக்ஷய் குமார் குடியரசுத் தலைவரிடம் மீண்டும் கருணை மனு தாக்கல்

டெல்லி: நிர்பயா குற்றவாளிகளில் ஒருவரான அக்ஷய் குமார்  குடியரசுத் தலைவருக்கு மீண்டும் கருணை மனு அனுப்பியுள்ளார். ஏற்கனவே வழங்கிய மனுவில் முறையான காரணங்களை தெரிவிக்கவில்லை என புதிதாக அக்ஷய் கருணை மனு தாக்கல் செய்துள்ளார்.

டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா கற்பழித்து கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் முகேஷ் குமார் சிங்(32), பவன்குமார் குப்தா(25), வினய்குமார் ஷர்மா(26), அக்ஷய் குமார்(31) ஆகிய 4 பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அவர்கள் தற்போது டெல்லி திகார் சிறையில் உள்ளனர். அவர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட கருணை மனு, மறுஆய்வு மனு போன்ற சட்ட நடவடிக்கைகளால் அவர்களை தூக்கில் போடுவது 2 முறை தள்ளிப்போனது.

நிர்பயா குற்றவாளி பவன்குமார் குப்தாவின் சீராய்வு மனுவை நாளை மறுநாள் உச்சநீதிமன்றம் விசாரிக்க உள்ளது. தனக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கக் கோரி பவன்குமார் தரப்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் நிர்பயா குற்றவாளிகளில் ஒருவரான அக்க்ஷய் குடியரசுத் தலைவருக்கு மீண்டும் கருணை மனு அனுப்பியுள்ளார்.

Tags : convicts ,Akshay Kumar ,President ,Republic , Nirbhaya, Akshay Kumar
× RELATED கெஞ்சிக் கேட்கிறேன்.. தோழர்களே, யாரும்...