×

பெண் ஆசை கண்ணை மறைத்ததால் 59 ஆயிரம் இழந்த வாலிபர்

சென்னை: அயனாவரம் குன்னூர் நெடுஞ்சாலையை சேர்ந்தவர் அருண் (20) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தனியார் கல்லூரியில் பொறியியல் படிப்பு படித்து வருகிறார்.  நேற்றுமுன்தினம் இரவு வீட்டில் தனது மொபைலில் இன்ஸ்டாகிராம் பார்த்துக்கொண்டிருந்த போது ரியா என்ற பெண் அருணை வீடியோ காலில் அழைத்து  உனது முகத்தையும் உனது அந்தரங்க பகுதியை பார்க்கவேண்டும் என கூறியுள்ளார். உடனே அருண் வீடியோ காலில் அவற்றை காண்பித்துள்ளார். உடனடியாக வீடியோ கால்  துண்டிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு மூன்று எண்களில் வெவ்வேறு ஆட்கள் அருணை தொடர்பு கொண்டு உன்னுடைய முகம் மற்றும் உனது அந்தரங்க பகுதிகள் எங்களிடம் உள்ளது. உனது மொபைல் போனில்  இருந்த மொத்த செல்போன் எண்களும் எங்களிடம் உள்ளது. தற்போது நீ காண்பித்த முகம் மற்றும் உனது அந்தரங்கத்தை உனது  தொலைபேசியில் உள்ள அனைத்து எண்களுக்கும் நாங்கள் அனுப்ப உள்ளோம்.

மேலும் யூ டியூபிலும் அப் லோடு செய்து விடுவாம் என கூறி மிரட்டியுள்ளனர். மேலும் அவ்வாறு அனுப்பாமல் இருக்க அறுபதாயிரம் ரூபாய் பணம் உடனடியாக தர வேண்டும் எனவும் மிரட்டியுள்ளனர். பயந்துபோன அருண் உடனடியாக மூன்று தவணையாக 59 ஆயிரம் ரூபாய் செலுத்தி உள்ளார். அதன்பிறகு அந்த எண்களை  தொடர்பு கொள்ள முடியவில்லை. அதன் பிறகு சுதாரித்துக் கொண்ட அருண் உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன் பேரில் அங்கு சென்ற அயனாவரம் போலீசார் அருணிடம்  புகார் பெற்று இன்ஸ்டாகிராம் மூலம் ஏமாற்றியவர்களை தேடிவருகின்றனர்

Tags : plaintiff ,plaintiffs , Female desire, youth
× RELATED விபத்தில் வாலிபர் பரிதாப சாவு