×

மாமல்லபுரத்தை அழகுபடுத்த தேவைப்படும் நிதி குறித்து ஆய்வு குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விவரங்கள் என்னென்ன? உயர்நீதிமன்றம் கேள்வி

சென்னை: மாமல்லபுரத்தை அழகுபடுத்த தேவைப்படும் நிதி குறித்து ஆய்வு குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விவரங்கள் என்னென்ன? என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மாமல்லபுரத்தை அழகுபடுத்துவது தொடர்பாக நீதிபதி கிருபாகரன் அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நீதிபதி கிருபாகரன் கடிதத்தின் அடிப்படையில் உயர்நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. இந்த வழக்கானது கடந்த மாதம் விசாரணக்கு வந்தபோது, யுனெஸ்கோவால் புராதன சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள மாமல்லபுரத்தை அழகுபடுத்த மத்திய அரசு தான் நிதி ஒதுக்க வேண்டும் என்று தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து மாமல்லபுரத்தை அழகுபடுத்த எவ்வளவு நிதி தேவைப்படும்? இந்த நிதியில் மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்பு எந்தளவில் இருக்கமுடியும்? என்பது குறித்து தமிழக சுற்றுலாத்துறைச் செயலாளர், நிதித்துறைச் செயலாளர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர், தொல்லியல் துறை இயக்குனர் ஆகியோர் ஆலோசனை நடத்த வேண்டும். பின்னர், அது குறித்த அறிக்கையை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவேண்டும், என்று உத்தரவிட்டனர்.

இதனையடுத்து இந்த வழக்கின் விசாரணையை பிப்ரவி 25ம்(இன்று) தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதன்படி, இந்த வழக்கானது இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மாமல்லபுரத்தை அழகுபடுத்த தேவைப்படும் நிதி குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விவரங்கள் என்னென்ன? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், இதுகுறித்து மார்ச் 11ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Tags : review committee meeting ,Mamallapuram ,High Court , Mamallapuram, Finance, Research Committee, Madras High Court
× RELATED நீதித்துறையின் நெறிமுறைகளை மாவட்ட...