×

கடற்கரையில் விதிமீறி கட்டப்பட்ட சொகுசு பங்களாக்கள் அகற்றம்

சென்னை: சென்னையில் இருந்து புதுச்சேரி வரை செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் கடற்கரை பகுதியை ஒட்டி கடற்கரை ஒழுங்குமுறை மேலாண்மை மண்டல சான்று இல்லாமல் சொகுசு பங்களாக்கள், பண்ணை வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படுவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து சென்னை மாநகராட்சி, சிஎம்டிஏ, மாமல்லபுரம் உள்ளூர் திட்டக்குழுமம் ஆகிய அமைப்புகள் இந்த விதிமீறல் கட்டிடங்களை அகற்ற வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து மாமல்லபுரம் உள்ளூர் திட்டக்குழுமம் சார்பில் கானத்தூர் முதல் மாமல்லபுரம் வரை கடற்கரை ஒழுங்குமுறை மண்டல விதிமுறை மீறி கட்டப்பட்ட கட்டிடங்களின் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டது.

குறிப்பாக முட்டுக்காடு ஊராட்சியில் அனுமதியற்ற மனைப்பிரிவில் கட்டப்பட்ட கட்டிடங்கள் வரும் 25ம் தேதி இடிக்கப்படும் என சம்பந்தப்பட்ட கட்டிட உரிமையாளருக்கு மாமல்லபுரம் உள்ளூர் திட்டக்குழும உறுப்பினர் செயலர் நோட்டீஸ் அனுப்பினார். இந்நிலையில், விதிகளை மீறி கட்டப்பட்டு இருந்த கட்டிடங்களின் உரிமையாளர்களே, அந்தந்த சொகுசு பங்களாக்களை பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து அகற்றி வருகின்றனர்.


Tags : luxury bungalows ,beach , Beach, Luxury Bungalows, Disposal
× RELATED திருவாரூரில் விவசாய நிலத்தில் பரவிய...