×

சந்திரபாபு ஆட்சியில் நடந்த ஊழல்களை விசாரிக்க சிறப்பு விசாரணை குழு: ஆந்திராவில் அதிரடி

திருமலை: ஆந்திராவில் முதல்வர் ஜெகன் மோகன் தலைமையில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததில் இருந்து, தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான சந்திரபாபுவுக்கு அடுக்கடுக்காக பிரச்னைகள் ஏற்பட்டு வருகிறது. தற்போது, அவருடைய 5 ஆண்டு கால ஆட்சியில் அமராவதி தலைநகர் பெயரில் பினாமிகள் நிலம் வாங்கியது, அரசு ஒப்பந்தங்கள் அழைக்கப்பட்டதில் நிபந்தனைகளை மீறியது உட்பட, 50 துறைகளில் நடைபெற்ற ஊழல்களை விசாரிப்பதற்காக மூத்த ஐபிஎஸ் அதிகாரி ரகுராம் தலைமையில், 10 பேர் கொண்ட சிறப்பு விசாரணை குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், ‘சந்திரபாபுவை பழிவாங்கும் நடவடிக்கையில் ஜெகன் மோகன் அரசு ஈடுபடுகிறது,’ என தெலுங்கு தேசம் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

Tags : Special Investigation Team ,Chandrababu ,Andhra Pradesh ,investigation team , Chandrababu regime, corruption and investigation team
× RELATED ஆந்திராவில் பரபரப்பாக மாறும் அரசியல்...