×

காலகேயர்களின் மொழியை நீங்களும் கற்கலாம்...! ’கிளிக்கி’ மொழி அறிமுகமானது

சென்னை : காலகேயர்கள் பேசும் ’கிளிக்கி’ மொழியை தற்போது அனைவரும் கற்றுக் கொள்ளும் வகையில் இணையதளம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இயக்குனர் ராஜமௌலியின் பாகுபலி திரைப்படத்தில் காலகேயர்கள் பேசும் கிளிக்கி மொழி மதன் கார்க்கியால் உருவாக்கப்பட்டது. முற்றிலும் புதிதான இந்த மொழியை அனைவரும் கற்றுக் கொள்ளும் வகையில் இலக்கண விதிகளோடு முழுவதுமாக உருவாக்கி இருக்கிறார் மதன் கார்க்கி.

கிளிக்கி மொழிக்காக புதிதாக ஒரு இணையதளத்தையும் கார்க்கி தொடங்கி இருக்கிறார். கற்பகருக்கு லாகின் மிக எளிமையான மொழி என்ற அடைமொழியோடு கிளிக்கி மொழி இணையதளம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 3000 சொற்களோடு ஆங்கில கிளிக்கு ஆங்கில ஒலி அகராதியும் தங்கள் பெயரை கிளக்கியில் எழுதிப்பார்க்கும் கருவியும் இந்த இணையதளத்தில் கிடைக்கும்.சொற்களை கற்பதற்கான சொல் விளையாட்டுகளும் பிற மொழிகளில் இருந்து கிளிக்கு மொழிக்கு ஒலி மாற்றும் வசதியும் கிளிக்கு இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. 


Tags : Galatians ,Madan Corky , Galatians, website, click, language, Madan Corky
× RELATED ₹621 கோடி மதிப்பீட்டில், 3...