×

உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை நீதிபதி முரளிதர் பஞ்சாப்புக்கு மாற்றம்

புதுடெல்லி: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான நீதிபதிகள் ரமணா, அருண் மிஸ்ரா, நாரிமன் மற்றும் பானுமதி ஆகியோர் அடங்கிய 5 நீதிபதிகள் கொண்ட கொலிஜியம், கடந்த 12ம் தேதி கூடியது. இதில், டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக இருக்கும் முரளிதரை பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்றத்துக்கு மாற்றுவதற்கு பரிந்துரை செய்யப்பட்டது. மேலும், மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி ரஞ்சித் வி மோரை மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கும், கர்நாடகா உயர் நீதிமன்ற நீதிபதி விஜய குமார் மலிமாத்தை உத்தரகாண்ட் உயர் நீதிமன்றத்துக்கு மாற்றவும் பரிந்துரை செய்தது. நீதிபதி முரளிதர், 1984ம் ஆண்டு சென்னையில் வழக்கறிஞராக பணியை தொடங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : Muralidhar ,collegium ,Punjab ,Supreme Court , Supreme Court collegium ,Judge Muralidhar, transferred to Punjab
× RELATED உச்சநீதிமன்ற கொலிஜியத்தை...