×

60 சவரன் கொள்ளை

சென்னை:  சென்னை அடுத்த பூண்டியை சேர்ந்தவர் விஜி (39). ஒன்றிய 13வது வார்டு கவுன்சிலர். அதிமுக நிர்வாகி. இவர் நேற்று முன்தினம் காலை பூண்டியில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்காக வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் சென்றார்.
மாலை வீடு திரும்பியபோது பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தது. பீரோவும் உடைக்கப்பட்டு இருந்தது. அதில் இருந்த 60 சவரன் நகைகள், 1 கிலோ வெள்ளி, ₹2.72 லட்சம் கொள்ளை போனது தெரிந்தது. புகாரின் பேரில் புல்லரம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பட்டப்பகலில் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து நகை, பணத்தை கொள்ளையடித்த நபர்கள் பற்றி தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.


Tags : shaving robbery , robbery
× RELATED நள்ளிரவில் வீட்டின் கதவை உடைத்து...