×

மாநகராட்சிக்கு தேர்தல் நடத்த வசதியாக வார்டு புனரமைப்பு பணி எப்போது தொடங்கும்? : மாநில அரசுக்கு ஐகோர்ட் கேள்வி

பெங்களூரு : பெங்களூரு மாநகராட்சி தேர்தல் நடத்த வசதியாக வார்டு புனரமைப்பு பணி எப்போது தொடங்கப்படும் என்ற விவரத்தை 18ம் தேதி (இன்று) எழுத்து மூலம் தெரிவிக்க வேண்டும் என்று மாநில அரசுக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மாநகராட்சிக்கு கடந்த 2015ம் ஆண்டு தேர்தல் நடந்தது. முதல் சுழற்சி முறையில் நான்கு சுற்று மேயர் மற்றும் துணைமேயர் தேர்தல் முடிந்ததை தொடர்ந்து கடைசி சுற்றுக்கான மேயர் மற்றும் துணைமேயர் தேர்ந்தெடுக்கும் தேர்தல் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் நடத்தி முடிக்கப்பட்டது. கடைசி சுற்றில் மேயராக கவுதம்குமார் ஜெயினும், துணைமேயராக மோகன்ராஜும் உள்ளனர். அவர்களின் பதவி காலம் வரும் செப்டம்பர் மாதம் முடிகிறது உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் நகர உள்ளாட்சிகளின் பதவிகாலம் முடிவதற்கு 6 மாதங்கள் முன்பே தேர்தல் நடத்துவதற்கான பணியை மாநில தேர்தல் ஆணையம் மேற்கொள்ள வேண்டும் என்று கூறி உள்ளது.

மாநகராட்சிக்கு தேர்தல் நடத்த வசதியாக மக்கள் தொகை அடிப்படையில் வார்டு பிரிப்பு பணியும் சாதிவாரியான இட ஒதுக்கீடு பட்டியலையும் வெளியிடும்படி மாநில தேர்தல் ஆணையத்தின் சார்பில் மாநில நகர வளர்ச்சி துறைக்கு கடிதம் எழுதப்பட்டது. ஆனால் இதற்க மாநில அரசின் சார்பில் எந்த பதிலும் தெரிவிக்கவில்லை.வேறுவழியில்லாமல் மாநகராட்சிக்கு தேர்தல் நடத்த வசதியாக வார்டு புனரமைப்பு பணி மேற்கொள்ள மாநில அரசுக்கு உத்தரவிடக்கோரி தேர்தல் ஆணையத்தின் சார்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அம்மனு கடந்த வாரம் தலைமை நீதிபதி அபய் சீனிவாஸ் ஓகா தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இது தொடர்பாக ஆட்ேசபனை மனு தாக்கல் செய்யும்படி மாநில அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை பிப்ரவரி 17ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

இவ்வழக்கு நேற்று மீண்டும் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மாநில அரசின் சார்பில் ஆட்ேசபனை மனுவில், வார்டு புனரமைப்பு பணி மேற்கொள்ள 30 நாட்கள் காலவகாசம் அளிக்க வேண்டும்  என்றார். அதற்கு மாநில தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஆஜரான வக்கீல் மாநகராட்சி பதவி காலம் முடிய முன்னும் 7 மாதங்கள் மட்டுமே பாக்கியுள்ளதால் உடனடியாக புனரமைப்பு பணி மேற்கொள்ள உத்தரவிட வேண்டும்  என்றார். அதற்கு தலைமை நீதிபதி கூறும்போது, அரசின் மெத்தன போக்கை பார்க்கும்போது, மாநகராட்சிக்கு தேர்தல் நடத்த விரும்பமில்லையோ என்று எண்ண தோன்றுகிறது.  எனவே காலவகாசத்ைத வழங்க முடியாது. வார்டு புனரமைப்பு மற்றும் சாதிவாரி இடஒதுக்கீடு பணிகள் எப்போது தொடங்கப்படும் என்பதை 18ம் தேதி (இன்று) நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்று கூறி விசாரணையை ஒத்தி வைத்தனர்.


Tags : elections ,corporation ,State Government ,Ward , ward reconstruction work,facilitate elections , corporation,High court Question ,State Government
× RELATED மக்களவைத் தேர்தலில் பாஜக உடன் கூட்டணி...