கொரோனா வைரஸ் காய்ச்சல் விழிப்புணர்வு பேரணி

இலுப்பூர்: இலுப்பூரில் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் கொரோனோ வைரஸ் காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது. அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் துவங்கிய விழிப்புணர்வு பேரணியை பேரூராட்சி செயல் அலுவலர் பரமேஸ்வரி துவக்கி வைத்தார்.

பேரணியானது இலுப்பூரில் உள்ள முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்தது. பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்று கொரோனா வைரஸ் காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி சென்றனர். இதில் பள்ளி ஆசிரியைகள், பேரூராட்சி பணியாளர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags : Coronavirus Fever Awareness Rally , Coronavirus Fever Awareness Rally
× RELATED ஒரே பைக்கில் சென்ற 3 வாலிபர்களை லத்தியால் தாக்கிய எஸ்ஐ