×

உலகின் பெரிய ஸ்டேடியம்: டிரம்ப் திறக்கிறார்

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உலகின் மிகப்ெபரிய கிரிக்கெட் விளையாட்டு அரங்கம் 700 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது. சர்தார் வல்லபாய் பட்டேல் பெயரிலான இந்த அரங்கில் மொத்தம் ஒரு லட்சத்து 10ஆயிரம் பேர் உட்கார்ந்து போட்டியை ரசிக்கலாம்.  இந்த அரங்கு முழுவதும் இரவை பகலாக்கும் ஒளிரும் மின்வசதி செய்யப்பட்டுள்ளது. அப்படி ஒளிரும் போது இந்த அரங்கில் எங்கும் நிழலையே பார்க்க முடியாதாம். சுமார் 63 ஏக்கர் பரப்பளவில் பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள இந்த அரங்கை பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில்,  இந்தியா வரவுள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பிப்.24ம் தேதி திறந்து வைக்க உள்ளார்.


Tags : World's Biggest Stadium: Trump Opens , World's Biggest Stadium, Trump
× RELATED வடமாநிலங்களில் வெட்டுக்கிளிகள்...