சிஏஏ போராட்டத்திற்கு நிதி உதவி என்ஜிஓவுடன் தொடர்புடைய அமைப்புக்கு ஈ.டி. சம்மன்

புதுடெல்லி: பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் தன்னார்வ அமைப்புடன் தொடர்புடைய அமைப்புக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது.  கேரளாவை சேர்ந்த ஒரு அமைப்பு மீது கடந்த 2018ம் ஆண்டு பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்தது. இந்நிலையில், உத்தர பிரதேசம் உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் சமீபத்தில் நடைபெற்ற குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்ட வன்முறைக்கு இந்த அமைப்பு பண உதவி செய்துள்ளதை அமலாக்கத் துறை கண்டறிந்துள்ளது. ஆனால், இந்த குற்றச்சாட்டை அந்த அமைப்பு `அடிப்படை ஆதாரமற்றது’ என்று மறுத்துள்ளது.இந்நிலையில், அந்த அமைப்பை சேர்ந்த 7 நிர்வாகிகளுக்கு சம்மன் அனுப்பி அமலாக்கத் துறை உத்தரவிட்டுள்ளது. இந்த 7 பேருடன் தனியார் தன்னார்வ அமைப்பை சேர்ந்தவர்களும் இந்த வழக்கு தொடர்பாக விசாரணை அதிகாரி முன் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.Tags : CAA ,organization ,struggle ,Sammon , CAA Struggle, Financial Aid NGO, ET
× RELATED சிஏஏவுக்கு எதிராக போராட்டம்...