×

சென்னையில் மாற்றுத்திறனாளி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு: போக்சோ நீதிமன்றம் பிப்.1ல் தீர்ப்பு!

சென்னை: சென்னையில் 12 வயது மாற்றுத்திறனாளி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் பிப்ரவரி 1ம் தேதி போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கவுள்ளது. சென்னை அடுக்குமாடி குடியிருப்பில் 12 வயது மாற்றுத்திறனாளி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பான வழக்கில் குடியிருப்பில் வேலை பார்ப்பவர்கள் உள்ளிட்ட 17 பேர், கடந்த 2018ம் ஆண்டு கைது செய்யப்பட்டனர். பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் அளித்த புகாரின் அடிப்படையில் குழந்தைகள் வன்கொடுமை, போக்சோ, கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

அதன் பிறகு 2019ம் ஆண்டு குண்டர் சட்டத்திலிருந்து குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டாலும், இதுவரையில் அவர்கள் சிறையில்தான் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கான ஜாமீன் மனுவும் மறுக்கப்பட்டுள்ளது.  இதுகுறித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் வழக்கினை  கடந்த 9 மாதங்களாக விசாரித்து வந்தது. இதனை தொடர்ந்து, குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பு 7 சாட்சிகள், அரசு தரப்பு 36 சாட்சிகளும் விசாரிக்கப்பட்டு, 120 ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. மேலும் அனைத்து தரப்பு விசாரணைகளும் முடிவுற்ற நிலையில்,  தீர்ப்பு வழங்காமல் ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இதனிடையே கைது செய்யப்பட்ட 17 பேரில் பாபு என்பவர் உடல்நல குறைவால் உயிரிழந்துவிட்டார்.  இந்நிலையில் குற்றவாளிகள் 16 பேருக்கும் வரும் பிப்ரவரி 1ம் தேதி தீர்ப்பு வழங்கபடவுள்ளது.

Tags : Chennai ,court judge , Defendant, Girl, Sexual Harassment, Madras High Court, Judgment
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...