தஞ்சை பெரியகோயில் குடமுழுக்கு விழா துவக்கம்

தஞ்சை: தஞ்சை பெரியகோயில் குடமுழுக்கு விழா நேற்று தொடங்கியது. தஞ்சை பெரியகோயில் குடமுழுக்கு விழா 23 ஆண்டுகளுக்கு பிறகு பிப்.5ம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து திருப்பணிகள் கடந்த ஓர் ஆண்டாக நடந்து வந்தன. இப்பணிகள் தற்போது முடிவடைந்துள்ளது. இதையடுத்து நேற்று காலை சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க பூஜைகளுடன் குடமுழுக்கு விழா தொடங்கியது. இதில் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து மாலை மேல் கிராம சாந்தி, வடுக யந்திர பூஜை பிரார்த்தனை நடைபெற்றது. இன்று காலை 8 மணிக்கு மகாகணபதி ஹோமம், பிரும்மச்சாரி பூஜை, சுமங்கலி பூஜை நடை பெறுகிறது. 31ம் தேதி காலை பள்ளி அக்ரகாரம் வெண்ணாற்றிலிருந்து புனித நீர் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு பூஜைகள் நடைபெற உள்ளன.

பிப்.1ம் தேதி காலை முதல் 4ம் தேதி வரை காலயாக பூஜை, தீபாராதனை நடைபெறுகிறது. 5ம் தேதி அதிகாலை 4.30 மணிக்கு 8ம் கால யாகபூஜையும், காலை 7.25 மணிக்கு திருக்கலசங்கள் எழுந்தருளல், 9.30 மணிக்கு அனைத்து விமானம் மற்றும் ராஜகோபுர குடமுழுக்கு, 10 மணிக்கு பெரியநாயகி உடனுறை பெருவுடையார் மற்றும் அனைத்து மூலவர்களுக்கும் குடமுழுக்கு, மஹா தீபாராதனை, அருட்பிரசாதம் வழங்கியருளல் ஆகியவை நடைபெற உள்ளது.  தொடர்ந்து அன்று மாலை 6 மணிக்கு பெரியநாயகி உடனுறை பெருவுடையாருக்கு பேரபிஷேகமும், இரவு 8 மணிக்கு பஞ்சமூர்த்திகள் திருவீதியுலா காட்சியருளல் நடைபெற உள்ளது. பிப்.1ல் போராட்டம்: தமிழ் தேச பொதுவுடமை கட்சி தலைவர் பெ.மணியரசன், மதுைர ஐகோர்ட் கிளை வளாகத்தில் நிருபர்களிடம் நேற்று கூறுகையில், தஞ்சை பெரிய ேகாயிலில் பிப். 5ல் நடக்கும் குடமுழுக்கு விழாவை தமிழில் தான் நடத்த வேண்டும். ஏனெனில், கோயிலைக் கட்டிய மன்னர் ராஜராஜ சோழன், பவண பிடாரன் என்னும் தமிழ் ஓதுவாரின் தலைமையில் 48 ஓதுவார்களைக் ெகாண்டு தமிழில் அர்ச்சனை செய்துள்ளார். இதற்கான சான்றுகள் உள்ளன.

இடைப்பட்ட காலத்தில், சமஸ்கிருதத்தை புகுத்தி தமிழை வெளியேற்றியுள்ளனர். சமஸ்கிருதத்தில் குடமுழுக்கு நடத்தப்பட வேண்டும் என்பதற்கான பதிவுகளோ, ஆதாரமோ இல்லை என 2015ல் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. தமிழ் மற்றும் சமஸ்கிருதம் ஆகியவற்றில் குடமுழுக்கு நடத்தப்படும் என அமைச்சர் மற்றும் அதிகாரிகள் கூறுவதை ஏற்க முடியாது. தமிழ் ஆகம விதிப்படி தமிழில் தான் அர்ச்சனை மற்றும் குடமுழுக்கு நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி பிப். 1ல் தஞ்சையில் போராட்டம் நடத்தப்படும் என்றார்.
இந்நிலையில் தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழாவை தமிழில் நடத்த வேண்டும் என்றும், தொல்லியல் துறை அனுமதியின்றி நடத்தக்கூடாது என்றும் ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை இன்று நடக்கிறது.Tags : Tanjay Periyakoil , Tanjay Periyakovil, Kudumbullum Ceremony
× RELATED திருச்செந்தூரில் நாளை மணிமண்டப...