×

திருவாரூர்- கடலூர் வரை மின்மய பணி நிறைவு: ரயில் இன்ஜின் சோதனை ஓட்டம்

திருவாரூர்: திருவாரூரிலிருந்து மயிலாடுதுறை வழியாக கடலூர் வரையிலான மின்மயம் திட்ட பணி முடிவுற்றுள்ளதையடுத்து ரயில் இஞ்சின் சோதனை ஓட்டம் நேற்று நடைபெற்றது. தெற்கு ரயில்வேயில் ஏற்கனவே சென்னையிலிருந்து விழுப்புரம் வரையில் மின்மயம் இருந்து வரும் நிலையில் பயணிகளின் கோரிக்கையினை ஏற்று விழுப்புரத்திலிருந்து கடலூர் துறைமுகம் மற்றும் சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை மற்றும் மயிலாடுதுறையிலிருந்து திருவாரூர் மற்றும் மயிலாடுதுறையிலிருந்து கும்பகோணம் வழியாக தஞ்சைக்கும் மின்மயம் திட்டம் என்பது கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் தென்னக ரயில்வே மூலம் அறிவிக்கப்பட்டது.

அதன்படி, விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறை வழியாக திருவாரூர் வரையில் 228 கிமீ தூரத்திற்கும் மயிலாடுதுறையிலிருந்து கும்பகோணம் வழியாக 56 கிமீ தூரத்திற்கு தஞ்சைக்கும் என மொத்தம் 286 கிமீ தூரத்தில் மின் மயமாக்க முடிவு செய்யப்பட்டு இதற்காக ரூ 329 கோடியே 85 லட்சம் நிதியும் ஒதுக்கப்பட்டது. அதன்படி இந்த பணி என்பது விழுப்புரத்திலிருந்து கடலூர் துறைமுகம் வரையில் ஓரு பகுதியாகவும், பின்னர் அங்கிருந்து மயிலாடுதுறை வரையில் ஒரு பகுதியாகவும் மயிலாடுதுறையிலிருந்து திருவாரூர் வரையில் ஒரு பகுதியாகவும் என 3 பிரிவுகளாக பணிகள் நடைபெற்றன.

இந்நிலையில் இந்த மின் பாதையில் நேற்று சோதனை ரயில் இன்ஜின் ஓட்டம் நடைபெற்றது. ரயில் இன்ஜின் சோதனை ஓட்டத்தை டிவிசனல் சீனியர் டெலிகாம் அதிகாரி மஹிந்தர் நேற்று கொடியசைத்து துவக்கி வைத்தார். இதனையொட்டி விழுப்புரத்திலிருந்து நேற்று காலை கொண்டுவரப்பட்ட மின்சார ரயில் இன்ஜினை கொண்டு திருவாரூர் ரயில் நிலையத்தின் 3வது பிளாட்பாரத்திலிருந்து இந்த இன்ஜின் ஓட்டம் மாலை 5 மணியளவில் துவங்கப்பட்டு பின்னர் மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம் வழியாக கடலூர் சென்றடைந்தது.

Tags : Thiruvarur ,Cuddalore , Thiruvarur- Cuddalore, electrification work, completed
× RELATED மேகமூட்டமும், சாரல் மழையும் இருந்தது...