×

உயரழுத்த மின்கம்பத்தில் ஏறி வாலிபர் தற்கொலை முயற்சி

சென்னை:  சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து வடமாநிலங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு தினமும் ஏராளமான ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் ரயில் நிலைய 1வது நடைமேடையில் உள்ள பார்சல் அலுவலகம் அருகே நேற்று காலை வாலிபர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். திடீரென அவர், தண்டவாளத்தின் அருகில் உள்ள உயர் அழுத்த மின்கம்பத்தின் மீது ஏறினார். அந்த வாலிபரை கீழே இறங்கி வரும்படி கூறியும், காதில் வாங்கிக் கொள்ளாமல் உயர் அழுத்த கம்பி செல்லும் மின்கம்பத்தில் ஏறி அமர்ந்துகொண்டார். தகவலறிந்து கள் சென்ட்ரல் ரயில்வே போலீசார் வந்து மின் இணைப்பை துண்டித்தனர். பின்னர் கொண்டித்தோப்பு தீயணைப்புத் துறையினர் மின் கம்பத்தில் ஏறிய வாலிபரை பத்திரமாக மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
விசாரணையில் அசாம் மாநிலத்தை சேர்ந்த மைனாதுனி (30) என்பதும், மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரிந்தது. இதையடுத்து வாலிபரை தண்டையார்பேட்டை அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள மனநல காப்பகத்தில் சேர்க்க ரயில்வே இன்ஸ்பெக்டர் தாமஸ் ஏசுதாசன் தலைமையிலான போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.


Tags : suicide , Pole high-voltage, youth suicide attempt
× RELATED தர்மபுரி அருகே இன்ஸ்டாகிராம்...