×

இறங்குமுகத்தில் தங்கத்தின் விலை: சவரனுக்கு ரூ.64 குறைந்து ரூ.30,560-க்கு விற்பனை

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.64 குறைந்து சவரன் ரூ.30,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ. 8 குறைந்து ரூ.3,820-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.30 காசுகள் குறைந்து ரூ.50.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் நிலவி வருகிறது. இதன் எதிரொலியாக உள்ளூரிலும் தங்கத்தின் விலையில் மாற்றம் உண்டாகிறது.

தங்கம் நுகா்வு அதிகரித்து வருவதுபோல, அதன்விலையும் படிப்படியாக உயா்ந்து வருகிறது. தங்கத்தின் விலை கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் இருந்து படிப்படியாக உயா்ந்து வந்தது. கடந்த ஆண்டு ஜூன் 1-ஆம் தேதி ஒரு பவுன் ரூ.24,632 ஆகவும், ஜூன் 19-இல் பவுன் ரூ.25,176 ஆகவும் இருந்தது. அதன்பிறகு, விலை அதிரடியாக உயரத் தொடங்கியது. இதனிடையே அமெரிக்கா - ஈரான் இடையே போர் பதற்றம் உருவாகியுள்ளது. இதனால், பங்குச் சந்தை, தொழில் துறை போன்றவற்றை தவிர்த்துவிட்டு, தங்கத்தில் முதலீட்டாளர்கள் அதிக அளவில் முதலீடு செய்கின்றனர்.

மற்றொருபுறம் உலக அளவிலும், உள்ளூரிலும் தங்கத்தின் தேவையும் அதிகரித்துள்ளதால், தங்கம் விலை உயர்ந்து வந்தது. எனினும் கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. இந்நிலையில் இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.64 குறைந்து சவரன் ரூ.30,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோன்று கிராமுக்கு ரூ. 8 குறைந்து ரூ.3,820-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.30 காசுகள் குறைந்து ரூ.50.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags : The price of gold, shaving, selling
× RELATED மக்களவை தேர்தலில் ஒப்புகைச்...