×

ரேஷனில் சர்க்கரை குடும்ப அட்டைகளை குறைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைகள் அதிகரிப்பதால் யாருக்கு லாபம்?: நிதிச்சுமை ஏற்படும்: அரசு மீது சமூக நல ஆர்வலர்கள் குற்றச்சாட்டு

சென்னை: ரேஷனில் சர்க்கரை பெறும் குடும்ப அட்டைகளை குறைத்துக் கொண்டு, அரிசி பெறும் குடும்ப அட்டைகளை அதிகரிப்பதால் தமிழக அரசுக்கு நிதிச்சுமை ஏற்படுவதுடன் அரிசி விநியோகத்தில் குழப்பம் ஏற்படும். மேலும் அதிகாரிகள், கடத்தல்காரர்களுக்கு தான் அதிக லாபம் என்று  சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர். தமிழகத்தில் தற்போது 2 கோடியே 10 லட்சம் குடும்ப அட்டைகள் உள்ளது. இதில் அரிசிபெறும் குடும்ப அட்டைகள் மட்டும் 2 கோடியே 5 லட்சம். சர்க்கரை பெறும் அரிசி அட்டைகள் 5 லட்சம் மட்டும். எந்த பொருளும் வேண்டாம் என்று கூறும் குடும்ப அட்டைகள் வெறும் 50 ஆயிரம். தமிழகத்தில் தற்போது அரிசி பெறும் 2 கோடியே 5 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு 3 லட்சம் மெட்ரிக் டன் அரிசி இந்திய உணவு கழகம் மூலம் பெறப்படுகிறது. இந்த அரிசி கிலோ ஒன்றுக்கு 8.30 காசுகள் மானியமாக மத்திய அரசுக்கு தமிழக அரசு வழங்குகிறது.


Tags : family members , With ration, sugar family cards, reduced rice, increased family cards, who benefits?
× RELATED நாட்டின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழா...