×

ஜம்மு காஷ்மீரில் பனிச்சரிவில் சிக்கி ராணுவ வீரர்கள், பொதுமக்கள் உட்பட 8 பேர் உயிரிழப்பு

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பனிச்சரிவில் சிக்கி ராணுவ வீரர்கள் பொதுமக்கள் உட்பட 8 பேர் பலியானியுள்ளனர். ஜம்மு காஷ்மீரில் உள்ள குப்வாரா மாவட்டத்தில் ராணுவ முகாம் அருகே நேற்று திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கி மூன்று ராணுவ வீரர்கள் பலியாகினர் எனவும் ஒருவரை காணவில்லை என ராணுவ உயர் அதிகாரி ஒருவர் கூறினார். மற்றொரு ராணுவ வீரர் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என தெரிவித்தார். மேலும்  கந்தர்பால் மாவட்டத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி பொதுமக்கள் 5 பேர் பலியானதாகவும், 4 பேர் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இதேபோல் கடந்த வருடம் மார்ச் மாதம் ஜம்மு காஷ்மீர் மாநிலம் லடாக் பகுதியின் படாலிக் செக்டாரில் ராணுவ வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அப்பகுதியில் திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது. பனிச்சரிவில் சிக்கிய ராணுவ வீரர்கள் படுகாயம் அடைந்தனர். சக வீரர்கள் அவரை மீட்டு ராணுவ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். மேலும் டிசம்பர் மாதம் சியாச்சின் மலைப்பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 4 வீரர்கள் உயிரிழந்தனர்.

Tags : soldiers ,Kashmir ,civilians ,Jammu , Eight people, including soldiers ,civilians, killed in avalanche,Jammu and Kashmir
× RELATED காஷ்மீர் பனிச்சரிவில் வீரர் பலி: 2 பேர் காயம்