×

ஒளியால் ஈர்க்கப்படும் விட்டில் பூச்சிகள்!

விட்டில் பூச்சி அல்லது அந்துப்பூச்சி (Moth) என்பது பட்டாம்பூச்சியைப் போன்ற லெப்பிடோப்டெரா (Lepidoptera) இனத்தைச் சேர்ந்த பூச்சி. பார்ப்பதற்கு பட்டாம்பூச்சி போன்றிருந்தாலும் பழுப்பு நிறம் கொண்டது. இரவில் உலவும் இவை ஒளியின் வெளிச்சத்தால் ஈர்க்கப்படுகின்றன. அதனால்தான் விளக்கொளியால் ஈர்க்கப்படுகின்றன. பழுப்புநிறத் தோற்றம் கொண்டதால்  வண்ணத்துப்பூச்சியின் அலங்கார வகையினின்று மாறுபட்டவை. ஏறத்தாழ 1,60,000 விட்டில்பூச்சி சிற்றினங்கள் இருப்பினும், பெரும்பாலான உள்ளினங்கள் இன்னும் வகைப்படுத்தப்படவில்லை. அதேபோல பெரும்பாலான அந்துப்பூச்சி சிற்றினங்கள் இராவுலாவிகள்.

ஆனால், இவற்றில் மிகச்சிறிய எண்ணிக்கையிலான சிற்றினங்கள் பகலிலும், மாலை வேளையிலும் உலவக்கூடியவையாக உள்ளன. பட்டாம்பூச்சிகள் பெரும்பாலும் பகலுலாவிகள். அறிவியல் வகைப்பாட்டின்படி இவை பூச்சி இனத்தின் செதிலிறக்கையின் ((Lepis)­-செதில், ப்டெரான் (pteron)-இறக்கை (சிறகு) - Lepidoptera) வரிசையைச் சார்ந்தவை. இவ்வரிசையிலுள்ள பெரும்பான்மையான பூச்சிகள் விட்டில் பூச்சிகள் ஆகும். வாழ்க்கைச் சுழற்சியில் ஒவ்வொரு விட்டில்பூச்சியும் தன் வளர்ச்சியில் முட்டைப் பருவம் (Egg), புழுப் பருவம், கூட்டுப்புழுப் பருவம் (Pupa), இறக்கைகளுடன் முழு விட்டில்பூச்சி நிலை (Adult) என நான்கு நிலைகளைக் கடக்கின்றன.



Tags : Vitil insects attracted by light!
× RELATED தெலங்கானா, ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநில...