இந்தியாவின் சிறந்த கிராமத்தில் அடிப்படை வசதிகள் இல்லை...கிராம் மக்கள் புகார்

திருவண்ணாமலை: இந்தியாவின் சிறந்த கிராமமாக தேர்ந்தெடுக்கப்பட்ட மொழுகம்பூண்டி கிராமத்தில் எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லை என்று கிராம மக்கள் புகார் அளித்துள்ளனர். இந்தியாவிலேயே சிறந்த கிராமமாக திருவண்ணாமலை மாவட்டம் மொழுகம்பூண்டி கிராமத்தை மத்திய அரசு தேர்ந்தெடுத்துள்ளது. மத்திய அரசின் அறிவிப்பை அடுத்து மொழுகம்பூண்டி கிராமத்துக்கு சென்ற ஆட்சியர் கந்தசாமியிடம் கிராம் மக்கள் புகார் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 


Tags : village ,India ,Gram people , basic amenities ,best village, India ,Gram ,complain
× RELATED அடிப்படை வசதி இல்லாத வழுத்தூர் கிராமம்: பொதுமக்கள் அவதி