×

குலசேகரம் அருகே ஓட்டலில் புகுந்து வெங்காயம் திருட்டு

குலசேகரம்: குமரி மாவட்டம் கடையாலுமூட்டைச் சேர்ந்தவர்  முபாரக் கடாபி (30). இவர் பிணந்தோடு சந்திப்பில் ஓட்டல் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு 12  மணி அளவில்  வழக்கம்போல் ஓட்டலை பூட்டி  விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். நேற்று அதிகாலை, ஓட்டலை திறக்க வரும்போது முன்பக்க கதவின் பூட்டு  உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.   உள்ளே  சென்று பார்த்த போது மேஜையில் வைக்கப்பட்டிருந்த ₹5 ஆயிரம் ரொக்கம்  மற்றும் சமையல் கூடத்திலிருந்த 10 கிலோ பெரிய வெங்காயம், 10 லிட்டர்  பாமாயில் உள்ளிட்டவற்றை திருடிச் சென்றுள்ளனர். குலசேகரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து மர்ம நபர்களை தேடி  வருகின்றனர்.

Tags : Onion robbery ,hotel ,Kulasekaram Kulasekaram , Onion robbery , hotel , Kulasekaram
× RELATED தனியார் விடுதியில் லேப்டாப் திருடிய வாலிபர் கைது