×

வீட்டு பத்திரம், நகை, பணத்தை பறித்துவிட்டு வெள்ளை தாளில் கையெழுத்து வாங்கி மகளிர் காப்பக இயக்குநர் மிரட்டுகிறார்: மூதாட்டி போலீசில் பரபரப்பு புகார்

சென்னை:  சென்னை மேற்கு முகப்பேர் காளமேகம் சாலையை சேர்ந்தவர் ஸ்ரீவரன் (79). இவர், தேனாம்ேபட்டை காவல் நிலையத்தில் அளித்துள்ள புகாரில், கடந்த 1995ம் ஆண்டு எனது கணவர் இறந்து விட்டார். எங்களுக்கு குழந்தைகள் கிடையாது. தற்போது நான் ஆதரவற்ற நிலையில் முகப்பேரில் உள்ள பெண்கள் காப்பகத்தில் வசித்து வருகிறேன். இதற்கு முன்பு தேனாம்பேட்டை சேமியர்ஸ் சாலையில் உள்ள பெண்கள் காப்பகத்தில் தங்கி இருந்தேன். அப்போது பெண்கள் காப்பக இயக்குநர் மேரிதாமஸ், என்னிடம் ஆசைவார்த்தை கூறி, வங்கி லாக்கரில் வைத்திருந்த எனது பணம், நகை மற்றும் அண்ணாநகரில் உள்ள பல கோடி மதிப்புள்ள வீட்டின் பத்திரத்தை பிடுங்கிக் கொண்டார்.

 இதுகுறித்து வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டி, வெள்ளை தாளில் கையெழுத்து வாங்கி கொண்டார். ஆதரவற்ற எனக்கு இருந்த ஒரே வீடு மற்றும் நகை, பணத்தை அபகரித்து நடுத்தெருவில் விட்டு விட்டார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுத்து நகை, பணம் மற்றும் வீட்டின் பத்திரத்தை திரும்ப  பெற்று தர வேண்டும் என கூறியிருந்தார். அதன்படி தேனாம்பேட்டை போலீசார் பெண்கள் காப்பகம் நடத்தி வரும் இயக்குநர் மேரிதாமஸ் மீது ஐபிசி 406, 420 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : jewelery , Housing, Jewelry, Money, Signature, Archives Director, Muthathi, Police
× RELATED தனியார் பள்ளிகள் ஜூன் மாதம் வாங்க...