கம்பெனி ஊழியர் காரில் கடத்தல்

சென்னை: ராயப்பேட்டை  ஆயில் மங்கா தெருவை சேர்ந்தவர் கண்ணன் (40). தனியார் நிறுவன ஊழியர். நேற்று அதிகாலை 3 மணிக்கு இவரது வீட்டிற்கு வந்த 2 பேர், ‘‘நாங்கள் போலீசார், செல்போன் திருட்டு வழக்கு தொடர்பாக உன்னிடம் விசாரணை நடத்த வேண்டும் வா,’’ என்று கூறி அவரை அழைத்து சென்றுள்ளனர்.  ஆனால், அவர்கள் போலீஸ் வாகனத்தில் வராமல், கால் டாக்சியில் வந்ததால், கண்ணனை அழைத்து சென்றது காவலர்கள் தானா அல்லது கடத்தல்காரர்களா என அவரது உறவினர்கள் ஜாம் பஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். போலீசார் கண்ணன் வீட்டின் அருகில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் போலீசார் யாரும் விசாரணைக்கு கண்ணனை அழைத்து செல்ல வில்லை என்று தெரியவந்துள்ளது. இதனால் முன்விரோதம் காரணமாக கண்ணனை யாராவது கடத்தினார்களா என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது.

Tags : company employee
× RELATED சங்கராபாளையம் ஊராட்சி மன்ற தலைவரை...