×

திருவாரூர் மாவட்டத்தில் சிறுமிகள் அடமானம் வைக்கப்பட்டது தொடர்பாக 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு

திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் சிறுமிகள் அடமானம் வைக்கப்பட்டது தொடர்பாக 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திருவாரூர் மாவட்டம் குடவாசலை சேர்ந்த காளியப்பன் என்பவரின் மகள்கள் சங்கீதா, கவிதா இருவரும் அடமானம் வைக்கப்பட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் சிறுமிகளை வளர்த்து வந்த பாட்டி விஜயலட்சுமி என்பவரிடம் சிறுமிகளை தலா ரூ.10 ஆயிரத்துக்கு அடமானம் பெற்றதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விஜயலட்சுமி மற்றும் சிறுமிகளை பணம் கொடுத்து வாங்கிய சகுந்தலா, கனகா ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


Tags : Thiruvarur district Police ,girls ,district police ,Thiruvarur , Thiruvarur, girls, mortgage, charge
× RELATED இளம்பெண்களை ஏமாற்றிய நாகர்கோவில்...