×

சரிந்தது ஆபரண தங்கத்தின் விலை ; சவரன் ரூ. 88 குறைந்து ரூ. 28,728 விற்பனை

சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 88 ரூபாய் குறைந்துள்ளது. டிசம்பர் மாதத் தொடக்கத்திலிருந்தே தங்கம் விலை தொடர்ந்து குறைக்கப்பட்டு வந்தது. நேற்றைய தினத்தில் திடீரென தங்கம் விலை 96 ரூபாய் உயர்த்தப்பட்டது. இந்நிலையில் தங்கம் விலை இன்று மீண்டும் குறைந்துள்ளது.

ஆபரணத் தங்கத்தின் விலை!

சென்னையில் இன்று (டிசம்பர் 13) ஒரு கிராம் ஆபரணத் தங்கம் (22 கேரட்) 11 ரூபாய் குறைந்து 3,591 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று இதன் விலை ரூ.3,602 ஆக இருந்தது.அதேபோல, 28,816 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று 28,728 ரூபாயாகக் குறைந்துள்ளது. இன்று சவரனுக்கு 88 ரூபாய் விலை குறைந்திருக்கிறது.

தூய தங்கத்தின் விலை!


24 கேரட் தூய தங்கத்தின் விலை கிராமுக்கு 11 ரூபாய் குறைந்துள்ளது. இன்று அதன் விலை ரூ.3,771 ஆக இருக்கிறது. நேற்று 3,782 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.8 கிராம் தூய தங்கத்தின் விலை நேற்று 30,256 ரூபாயிலிருந்து இன்று 30,168 ரூபாயாகச் சரிந்துள்ளது. தூய தங்கத்தின் விலையும் 88 ரூபாய் குறைந்துள்ளது.

வெள்ளியின் விலை!


தங்கத்தின் விலை குறைக்கப்பட்டுள்ள நிலையில், வெள்ளி விலை இன்று சற்று உயர்ந்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.47 ஆக இருக்கிறது. நேற்று 46.90 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.47,000 ஆக இருக்கிறது.


Tags : Sales, Silver, Jewelery, Gold, shaving,
× RELATED இனி தங்க வேட்டை தான்... ஆபரணத்...