×

விசாரணைக்கு அழைத்து தாக்கப்பட்ட சிறுவனுக்கு 2 லட்சம் இழப்பீடு: மனித உரிமை ஆணையம் உத்தரவு

சென்னை: ஒக்கியம் துரைப்பாக்கம் கண்ணகி நகரைச் சேர்ந்த (17) சிறுவனை, கடந்த 2016ம் ஆண்டு வேளச்சேரி போலீசார் செல்போன் திருடியதாக காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று சரமாரியாக தாக்கி உள்ளனர். விசாரணைக்கு பின்பு சிறுவன் திருட்டில் ஈடுபடவில்லை என்று தெரியவந்ததால் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் தாக்கியதில் காயமடைந்த சிறுவன், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றான்.

இந்நிலையில் இச்சம்பவம் குறித்து பத்திரிகைகளில் செய்தி வெளிவந்தது. இதை பார்த்த மாநில மனித உரிமை ஆணைய நீதிபதி துரை.ஜெயச்சந்திரன் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், சாட்சியம் மற்றும் ஆவணங்களை வைத்து பார்க்கும்போது போலீசார் மனித உரிமை மீறலில் ஈடுபட்டது தெரியவந்தது. எனவே தமிழக அரசு, பாதிக்கப்பட்ட சிறுவனின் பெற்றோருக்கு 2 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.


Tags : trial ,Human Rights Commission , 2 lakh compensation, Human Rights Commission
× RELATED குறைதீர்க்கும் முகாம்