பெரம்பலுார் அருகே 400 கிலோ சின்ன வெங்காயம் திருட்டு...காவல்துறை விசாரணை

பெரம்பலுார்: பெரம்பலுார் அருகே விளைநிலத்தில் இருப்பு வைத்திருந்த 400 கிலோ வெங்காயத்தை மர்மநபர்கள் திருடி சென்றனர்.நாடு முழுவதும் கன மழையால் வெங்காயம் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ள நிலையில் அதன் விலையும் உயர்ந்துள்ளது. இதனை அடுத்து வெளிநாடுகளில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் பெரம்பலுார் அருகே உள்ள செங்குணம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சக்திவேல் என்பவர், வயலில் பட்டறை அமைத்து அதில் சின்ன வெங்காயத்தை இருப்பு வைத்திருந்தார். நேற்று மாலை, சக்திவேல் வயலுக்கு சென்று பார்த்த போது வயலில் இருப்பு வைத்திருந்த 400 கிலோ வெங்காயத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இதனை கண்டு சக்திவேல் அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனையடுத்து மருவத்துார் காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Perambalur , 400 kg , small onion, stolen ,Perambalur
× RELATED வெங்காயம் கிலோ ரூ.22-க்கு விற்பனை : மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான்