×

வெங்காயம் வாங்க கொடுத்த 8 லட்சத்தை சுருட்டிய லாரி டிரைவருக்கு போலீஸ் வலை

* பிரபல துணிக்கடை அதிபர் புகார்
* தனது வங்கி கணக்கில் செலுத்தியது அம்பலம்

சென்னை: நாசிக்கில் இருந்து வெங்காயம் வாங்க கொடுத்த 8 லட்சத்தை சுருட்டிய லாரி டிரைவர் மீது பிரபல துணிக்கடை அதிபர் போலீசில் புகார் அளித்துள்ளார். வெங்காயம் விலை கிலோ 180 முதல் 200 வரை உயர்ந்தது. எனினும் தட்டுப்பாடு நிலவுகிறது. இதை பயன்படுத்தி சென்னையில் உள்ள துணிக்கடை அதிபர்கள் மற்றும் மொத்த வியாபாரிகள் பலர் மொத்தமாக நாசிக்கில் இருந்து வெங்காயத்தை கொள்முதல் செய்து சில்லறையில் விற்பனை செய்து வருகின்றனர். அந்த வகையில், தி.நகர் ரங்கநாதன் தெருவில் இயங்கி வரும் பிரபல துணிக்கடை அதிபர் சுந்தரலிங்கம் என்பவர், தனது கடைகளுக்கு கடந்த மாதம் 24ம் தேதி மும்பை நாசிக்கில் இருந்து சென்னையில் உள்ள கிளைகளுக்கு 8 லட்சத்துக்கு பெல்லாரி வெங்காயம் கொள்முதல் செய்தார். பொதுவாக, கொள்முதல் செய்யப்படும் வெங்காயத்துக்கான பணம் லாரி டிரைவர்களிடம் கொடுத்து அனுப்புவது வழக்கம்.

அதன்படி, நாசிக்கில் இருந்து கொள்முதல் செய்த வெங்காயத்துக்கு 8 லட்சம் பணத்தை பிரபல துணிக்கடை அதிபர் சுந்தரலிங்கம் கிருஷ்ணகிரியை ேசர்ந்த லாரி டிரைவர் பிரகாஷ் என்பவரிடம் கொடுத்துள்ளார். ஆனால், இந்த பணத்தை நாசிக்கில் உள்ள வியாபாரியின் வங்கி கணக்கிற்கு லாரி டிரைவர் பிரகாஷ் மாற்றாமல் தனது வங்கி கணக்கில் வரவு வைத்துவிட்டு தலைமறைவாகி விட்டார். கொள்முதல் செய்த வெங்காயத்திற்கான பணத்ைத நாசிக் வியாபாரிகள் துணிக்கடை அதிபர் சுந்தரலிங்கத்திடம் கேட்டுள்ளனர். அதற்கு லாரி டிரைவரிடம் பணத்தை கொடுத்துவிட்டதாக அவர் கூறினார். அதன்பிறகு தான் லாரி டிரைவரை தொடர்பு கொண்டும் அவர் போன் எடுக்க வில்லை. அவர் 8 லட்சத்தை மோசடி செய்தது தெரியவந்தது. அதைதொடர்ந்து துணிக்கடை அதிபர் சுந்தரலிங்கம் 8 லட்சம் பணத்தை மோசடி செய்ததாக லாரி டிரைவர் பிரகாஷ் மீது மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி போலீசார் வழக்கு பதிவு செய்து லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

Tags : lorry driver , 8 lakh , buy onion, rolled lorry driver, police web
× RELATED சங்ககிரி விபத்துக்கு காரணமான லாரி ஓட்டுநர் கைது..!!