×

பொள்ளாச்சி அருகே 15 டன் ரேஷன் அரிசி கடத்தி வந்த லாரி பறிமுதல்

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே 15 டன் ரேஷன் அரிசி கடத்தி வந்த லாரி பறிமுதல் செய்யப்பட்டது. பொள்ளாச்சி அருகே தமிழக - கேரள எல்லை பகுதியில் உள்ள கோபாலபுரம் சோதனை சாவடியில் போலீசார் சோதனையிட்டனர். தூத்துக்குடியில் இருந்து வந்த லாரியை சோதனை செய்ததில் சுற்றிலும் உப்பு மூடையும், அதன் நடுவே 15 டன் , 400 கிலோ அளவிலான ரேஷன் அரிசியும் அடுக்கி வைக்கப்பட்டதை கண்டுபிடித்தனர். இதனையடுத்து லாரியுடன், அரிசி மூடைகளை பறிமுதல் செய்த போலீசார் கேரளாவுக்கு கடத்த முயன்றதாக கேரளாவை சேர்ந்த லாரி ஓட்டுநர் பிரசாத்தை கைது செய்தனர்.

Tags : Pollachi , Pollachi, ration rice, lorry, confiscation
× RELATED பொள்ளாச்சி பாலியல் வழக்கில்...