×

13வது மாடியில் இருந்து விழுந்து பலகை கட்டும் தொழிலாளர் பலி

வேளச்சேரி: அடையாறு பகுதியை சேர்ந்த பூசன் (35) என்பவர், நேற்று சோழிங்கநல்லூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 13வது மாடியில் விளம்பர பலகை கட்டும் பணியில் சக ஊழியர்களுடன் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராத  விதமாக கால் தவறி கீழே விழுந்து இறந்தார்.

* மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த அஜி ஜில்கான் (35), மடிப்பாக்கம் ராம்நகரில் தங்கி, தனியார் உணவகத்தில் பிரியாணி மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். இவர், நேற்று பள்ளிக்கரணை கைவேலி அருகே சைக்கிளில் சென்றபோது, பைக்  மோதியதில் இறந்தார்.
* அடையாறு கனல் பங்க் சாலையை சேர்ந்த கோபால் (18), அதே பகுதியில் பானிபூரி கடை நடத்தி வருகிறார். நேற்று இவரது கடைக்கு வந்து கத்தியை காட்டி மிரட்டி கல்லா பெட்டியில் வைத்திருந்த ₹2 ஆயிரத்தை பறித்து சென்ற அதே  பகுதியை சேர்ந்த பிரபு (25) என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags : floor , Falling,13th floor, board-building ,workers
× RELATED என்எல்சி நிறுவனத்தில் பணியாற்றி வந்த...