×

அமைச்சர் பேட்டி கேங்மேன் பணிக்கு பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தட்கல் மின் இணைப்பு முறையில் ஆண்டிற்கு 10 ஆயிரம் மின் இணைப்பு வழங்கப்படுகிறது. 20 ஆயிரம் மின் இணைப்புகளை ஆண்டிற்கு வழங்க உள்ளோம். யார் விருப்பப்படுகிறார்களோ அவர்களுக்குத்தான் தட்கல் மின் இணைப்பு கொடுக்கப்படுகிறது. கேங்மேன் பணி நியமனத்தில் இடைத்தரகர்களுக்கு வேலையில்லை. முழுக்க முழுக்க வீடியோ பதிவுசெய்யப்பட்டுதான் தேர்வுகள் நடத்தப்படுகிறது. தேர்வில் உடற்தகுதி செய்யப்பட்டு எழுத்து தேர்வு மூலம்தான் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இதில் எந்தவித முறைகேடுக்கும் வாய்ப்பில்லை. அதையும் தாண்டி யாராவது பணம் கொடுத்து ஏமாந்தால் அதற்கு அரசு பொறுப்பல்ல. இவ்வாறு அவர் கூறினார்.
Tags : Petty Gangman , Minister,Gangman mission,cheat
× RELATED தரமற்ற பணியால் பொதுமக்கள் எதிர்ப்பு