×

நளினி, முருகன் உண்ணாவிரதம் வாபஸ்

வேலூர்: ராஜிவ்காந்தி கொலை வழக்கில். வேலூர் பெண்கள் தனிச்சிறையில் உள்ள நளினி, கணவர் முருகனையும், தன்னையும் வேறு மாநில சிறைக்கு மாற்றக்கோரி  சாகும் வரை உண்ணாவிரதத்தை கடந்த 28ம் தேதி தொடங்கினார். நேற்று 10வது நாளாக நளினி உண்ணாவிரதத்தை தொடர்ந்தார். முருகன் 8வது நாளாக நேற்று முன்தினம் உண்ணாவிரதம் இருந்தார். அப்ேபாது அவரிடம் சிறைத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து முருகன் இளநீர் சாப்பிட்டு உண்ணாவிரதத்தை கைவிட்டார்.
இதையடுத்து அவர் நேற்று காலை 9.20 மணியளவில் பெண்கள் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு நளினியை சந்தித்து பேசினார். அவர் கேட்டுக்கொண்டதால் நளினியும் உண்ணாவிரதத்தை கைவிட்டார்.Tags : Nalini ,Murugan , Nalini, Murugan Fasting, Withdraws
× RELATED தாய்மொழியில் பயிற்றுவிக்கக்கோரி 3வது ஆண்டாக மவுன விரதம்