×

9 மாவட்டங்களில் மட்டும் தேர்தலை தவிர்ப்பதன் மூலம் மாநில அரசு தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது: முத்தரசன் பேட்டி

சென்னை: 9 மாவட்டங்களில் மட்டும் தேர்தலை தவிர்ப்பதன் மூலம் மாநில அரசும், தேர்தல் ஆணையமும் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளன என முத்தரசன் தெரிவித்துள்ளார். மேலும் மாநில தேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்படவில்லை என்று முத்தரசன் குற்றம்சாட்டியுள்ளார். தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணைய பக்கங்களில் படிவங்கள் கிடைக்கவில்லை என முத்தரசன் புகார் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, ஐதராபாத்தில் 4 பேர் என்கவுண்டர் மூலம் சுட்டுக்கொல்லப்பட்டது  பற்றி அவர் கருத்து தெரிவித்தார். குற்றவாளிகள் நீதிமன்றத்தின் மூலம் மட்டுமே தண்டிக்கப்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.


Tags : state government ,districts ,interview ,elections ,Mutharasan , Election, state government, defeat, confessed, Mutharasan
× RELATED சந்திராபூரில் மது தடையால் ஏற்பட்ட...