×

அமைச்சர்கள், அதிகாரிகளுடன் அமித்ஷா திடீர் ஆலோசனை

புதுடெல்லி: விண்ணை தொடும் அளவுக்கு உயர்ந்து வரும் வெங்காய விலையை கட்டுப்படுத்துவது தொடர்பாக அமைச்சர்கள், உயர் அதிகாரிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை நடத்தினார்.
 வெங்காய விலை கிலோ ரூ.130 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். உயர்ந்து வரும் வெங்காயம் விலையை கட்டுப்படுத்துவது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, டெல்லியில் நேற்று அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் மற்றும் அமைச்சரவை செயலாளர் ராஜிவ் கவுபா, பிரதமரின் ஆலோசகர் பி.கே.சின்ஹா ஆகியோர் பங்கேற்றனர்.

Tags : Amit Shah ,consultation ,ministers , Ministers, Officers, Amit Shah
× RELATED சென்னை நட்சத்திர ஹோட்டலில் உள்துறை...