×

சில்லி பாயின்ட்...

* சர்வதேச கிரிக்கெட்டில் 400 சிக்சர் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை வசப்படுத்த, ரோகித் ஷர்மாவுக்கு இன்னும் ஒரே ஒரு சிக்சர் மட்டுமே தேவை. உலக அளவில் வெஸ்ட் இண்டீசின் கிறிஸ் கேல் (534 சிக்சர்), பாகிஸ்தானின் ஷாகித் அப்ரிடி (476 சிக்சர்) முதல் 2 இடங்களில் உள்ளனர். 400 சிக்சர் மைல்கல்லை எட்டும் 3வது வீரர் என்ற பெருமை ரோகித்துக்கு கிடைக்க உள்ளது.
*  இங்கிலாந்து அணியுடன் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோத உள்ள நிலையில், தென் ஆப்ரிக்க கிரிக்கெட் வீரர்கள் சங்கம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் செய்யப்போவதாக மிரட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
* காத்மாண்டுவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டித் தொடரின் பேட்மின்டன் பிரிவில் இந்திய அணி வீரர், வீராங்கனைகள் 8 பதக்கங்களை வெல்வதை உறுதி செய்துள்ளனர்.
* இங்கிலாந்து அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரை வென்றதற்கு தங்கள் வீரர்களின் கடின உழைப்பே காரணம் என்று நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் பாராட்டியுள்ளார்.
* ஆஸ்திரேலியாவின் கான்பெரா நகரில் நடைபெறும் 3 நாடுகள் மகளிர் ஹாக்கி போட்டித் தொடரில், இந்திய ஜூனியர் அணி 2-0 என்ற கோல் கணக்கில் நியூசிலாந்து அணியை வீழ்த்தியது.
* வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் பயிற்சியாளராக மான்டி தேசாய் (இந்தியா) நியமிக்கப்பட்டுள்ளார்.
* கேபிஎல் டி20ல் தொடரில் ஸ்பாட் பிக்சிங் சூதாட்டம் நடந்ததாக எழுந்த புகாரில், கர்நாடகா கிரிக்கெட் சங்க உறுப்பினர் சுதிந்திரா ஷிண்டேவை பெங்களூரு போலீசார் கைது செய்துள்ளனர்.

Tags : Rohit ,Indian , International Cricket, 400 Sixes, Indian Player, Rohit
× RELATED சில்லி பாயின்ட்...