×

பபாசிக்கு புதிய தலைவர், நிர்வாகிகள் தேர்வு

சென்னை: தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்திற்கு (பபாசி) புதிய தலைவர் மற்றும் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து, பபாசி வெளியிட்டுள்ள அறிக்கை: தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்திற்கு (பபாசி) இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் நிர்வாகக்குழு தேர்தல் கடந்த மாதம் 28ம் தேதி சென்னையில் நடந்தது. அதில், ஆர்.எஸ்.சண்முகம் ( செண்பகா பதிப்பகம்) தலைவராகவும், எஸ்.கே.முருகன் (நாதம் கீதம் புக் செல்லர்ஸ்) செயலாளராகவும், ஏ.கோமதி நாயகம் (சங்கர் பதிப்பகம்) பொருளாளராகவும், துணைத் தலைவர்களாக நாகராஜன் (பாரதி புத்தகாலயம்), ஒளிவண்ணன் (எமரால்டு பப்ளிஷர்ஸ்), இணை செயலாளராக எஸ்.சுரேஷ்குமார் (நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்) தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

நிர்வாகக்குழு, எம்.பாலாஜி (பாலாஜி புக் செல்லர்ஸ் & டிஸ்ட்ரிப்யூட்டர்ஸ்)- துணை இணை செயலாளர், பஞ்சந்தம் (புத்தக பூங்கா), செயற்குழு உறுப்பினர் (தமிழ்)- முத்துக்கருப்பன் ( செல்வ நிலையம்), முத்துச்சாமி (கீதம் பப்ளிகேஷனஸ்), சீனிவாசன் (நியூ புக் லேண்டஸ்), வேடியப்பன் (டிஸ்கவரி புக் பேலஸ்), செயற்குழு உறுப்பினர் (ஆங்கிலம்) - மனோகரன் (விவா புக்ஸ் பிரைவேட் லிமிடெட்), சிவா குமார் ( சிவா புக்ஸ்), சுரேஷ் (தி ஏசியன் பப்ளிகேஷன்ஸ்), சுவாமிநாதன் (சாம்ஸ் பப்ளிஷர்ஸ்), நிரந்தர புத்தகக்காட்சி உறுப்பினர் (தமிழ்)- மகாதேவன் (மகேஸ்வரி புத்தக நிலையம்), முனிசாமி (சிவகுரு பதிப்பகம்), நிரந்தர புத்தகக்காட்சி உறுப்பினர் (ஆங்கிலம்)- தேவானந்த் ( யுனிவர்சல் புக் ஹவுஸ்), குமரன் (எஸ்.எல்.என் புக் செல்லர்ஸ்).தேர்வு செய்யப்பட்டுள்ள இந்த குழு 2020 ஜனவரியில் நடைபெறும் சென்னை புத்தக காட்சியை நடத்துவார்கள்.

Tags : president ,executives ,Pabasi , Pabasi ,new president, executives
× RELATED குடியரசுத் தலைவரை இன்று மாலை 5 மணிக்கு...