×

நாட்டின் மிக இளம் வயதில் நீதிபதி எனும் பொறுப்பை ஏற்கும் ராஜஸ்தான் இளைஞன்

ஜெய்ப்பூர்: நாட்டிலேயே மிக இள வயதில் நீதிபதி பொறுப்பை ஏற்பவர் எனும் பெருமையை ராஜஸ்தானை சேர்ந்த இளைஞர் ஒருவர் பெறவுள்ளார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் மாவட்டத்தில் உள்ள மானசரோவர் பகுதியை சேர்ந்தவர் மயங்க் பிரதாப் சிங். 21 வயதே ஆன இவர் தனது 5 ஆண்டு கால சட்டபடிப்பை ராஜஸ்தான் பல்கலை கழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் பூர்த்தி செய்தார். இதையடுத்து இந்த ஆண்டு நடந்த நீதிபதிகளுக்கான தகுதி தேர்வில் கலந்து கொண்ட மயங்க் பிரதாப் சிங், அதிலும் தேர்ச்சி அடைந்தார். இதனை தொடர்ந்து, விரைவில் பதவியேற்கவுள்ள அவர், இந்தியாவிலேயே மிக இள வயதில் நீதிபதி ஆனவர் எனும் சிறப்பையும் பெற உள்ளார்.

நீதிபதி ஆவதற்கு குறைந்தபட்ச வயது வரம்பாக இருந்த 23 வயதை 21 ஆக ராஜஸ்தான் நீதிமன்றம் இந்தாண்டு குறைந்தது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், ராஜஸ்தான் நீதித்துறை சேவைகள் 2018 தேர்வில் தேர்ச்சி பெறுவதற்காக ஒவ்வொரு நாளும் 12 முதல் 13 மணி நேரம் வரை தொடர்ந்து படித்து வந்தேன். என் பெற்றோர்களும் எனது லட்சியத்திற்கு உறுதுணையாக இருந்தனர். ஒரு நல்ல நீதிபதியாக பணியாற்றுவோருக்கு நேர்மை தான் மிகவும் முக்கியம். வெளியில் இருந்து வரும் எந்த சக்திகளுக்கும் எளிதில் ஆளாகாமல், ஆள் பலம், பண பலத்துக்கு ஆசைப்படாமல் நேர்மையாக பணியாற்ற வேண்டும் என்பதே எனது விருப்பம் என தெரிவித்துள்ளார்.

Tags : Rajasthan ,country ,judge , Country, Young, Justice, Rajasthan Youth
× RELATED மோடியின் வெறுப்பு பேச்சு தேர்தல் ஆணையம் விசாரணை